shadow

ரூ.3500 கோடிக்கு அதிபதியாகும் எமிஜாக்சன்

ஏ.எல் விஜய் இயக்கிய மதராசபட்டினம் படம் மூலம் அறிமுகமாகி கெத்து, தெறி போன்ற படங்களில் நடித்த முன்னணி நடிகையான எமிஜாக்சன் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் எமிஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. எமிஜாக்சன் திருமணம் செய்யவுள்ள ஜார்ஜ் பனயோட்டுவின் மொத்த சொத்து மதிப்பு 3500 கோடி மேல் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே ஏற்கனவே கோடீஸ்வர லிஸ்ட்டில் உள்ள எமிஜாக்சன், திருமணத்திற்கு பின் மிகப்பெரிய சொத்துமதிப்புள்ள ஒரு குடும்பத்தின் உறுப்பினராக மாறவுள்ளார்.

Leave a Reply