ரூ.300 தரிசன டிக்கெட்: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புதிய நிபந்தனை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தென்னிந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது

இருப்பினும் ரூபாய் 300 தரிசன டிக்கெட் மட்டும் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்

இந்த நிலையில் ஜூன் 1 முதல் ரூபாய் 300 தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள் 5000 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது