ரூ.2000 கோடி மதிப்பில் வீடு வாங்கிய சவுதி அரேபியா இளவரசர்

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் என்பவர் ரூ.2000 கோடி மதிப்பிலான அரண்மனை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த வீடுதான் உலகிலேயே மிக அதிக மதிப்பை உடைய வீடு என்று கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் அருகே பிரெஞ்சு மன்னன் 14-ம் லூயி கட்டிய வெசலர்ஸ் அரண்மனை அருகே பழங்கால கட்டிடங்கள் இருந்த இடத்தை பிரான்சு நாட்டின் கட்டுமான நிறுவனமான எமாட் கசோக்கி விலைக்கு வாங்கி அங்குள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு பிரமாண்ட பங்காள வீடு ஒன்றை அங்கு கட்டி வந்தது.

முழுக்க முழுக்க 17-ம் நூற்றாண்டு பழங்கால அரண்மனை போன்ற தோற்றத்தில் உள் அறைகள் அமைக்கப்பட்ட் இந்த கட்டிடம் கடந்த 2008-ம் ஆண்டு கட்டுமானம் தொடங்கி 2011-ம் ஆண்டு முடிவடைந்தது. இதற்கு ‘சாட்டியூ லூயிஸ் 14’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடு 57 ஏக்கர் பரப்பளவுள்ள பிரமாண்ட வளாகத்தில் அமைந்துள்ளது. வீடு மட்டும் 75 ஆயிரத்து 350 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.

வீட்டு முற்றத்தில் தங்க தகடுகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கை நிரூற்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிநவீன அலங்கார விளக்குகள், முழுமையான ஏர்கண்டிசன் வசதி, சினிமா தியேட்டர், பல்வேறு நீச்சல் குளங்கள், அகழி என அனைத்து வசதிகளுடன் இந்த வீடு கட்டப்பட்டிருந்தது.

இந்த வீடு பலரது கைமாறியுள்ள நிலையில் தற்போது முகமது பின் சல்மான் விலைக்கு வாங்கியுள்ளார். இவர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டிருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த வீட்டை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *