shadow

ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் உறுதி

1500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அச்சப்பட வேண்டாம், ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட், வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம். மேலும் அறிமுகம் இல்லாத நபர்களின் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவோ, மோசடியில் சிக்கிக்கொள்ளவோ வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், “விவசாய வருமானத்துக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு தொடரும். சிறு வணிகர்கள், குடும்பத் தலைவிகள், கைவினைக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்” என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து நாளேடுகளில் நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள விளம்பரத்தில், “ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படாது. விசாரணையோ அச்சுறுத்தலோ இருக்காது. நேர்மையான அனைத்து குடிமகன்களும் அச்சமடையத் தேவையில்லை. விவசாயிகளின் வருமானத்துக்கு வரி கிடையாது. இதை எளிதாக வங்கியில் டெபாசிட் செய்யலாம்” என்று கூறியுள்ளது.

Leave a Reply