ரூ.18 லட்சம் விலையில் BMW பைக் வாங்குகிறாரா சிம்பு?

நடிகர் சிம்பு தற்போது சொந்தமாக தயாரித்து இயக்கும் ஆங்கில படத்தில் நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி விரைவில் அவர் மணிரத்னம் இயக்கவுள்ள படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சிம்பு BMW பைக்கில் வலம் வருவது போன்ற புகைப்படங்கள் ஃபேஸ்புக், டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சிம்பு தரப்பினர் கூறியபோது, ‘சிம்பு BMW கார் வாங்க ஷோரூம் சென்றதாகவும், அப்போது அங்கு புதிய BMW பைக்கை பார்த்ததும் அதை ஓட்டி பார்த்ததாகவும் தெரிவித்தனர். மேலும் விரைவில் அவர் BMW பைக்கை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு வாங்க விரும்பிய BMW பைக்கின் விலை ரூ.18 லட்சம் என்றும், சிம்பு மிக விரைவில் BMW பைக்கில் சென்னையை வலம் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *