ரூ.10 கோடி செலவில் கால்பந்து செட்: அசத்தும் ‘தளபதி 63; படக்குழு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கிய ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% முடிந்துவிட்டது. இந்த படத்தின் 30% காட்சிகள் கால்பந்து மைதானத்தில் நடைபெறும் காட்சிகளாக இருப்பாதால் இதற்காக சென்னை அருகே ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்பட்டு வருகிறது

இந்த செட்டில் அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும், இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டால் ஒட்டு மொத்த படப்பிடிப்பில் 75% முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த செட்டில் தான் கிளைமாக்ஸ் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply