ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்ட சம்பளம்: தற்காலிக ஆசிரியருக்கு குவியும் விண்ணப்பங்கள்

கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் இந்த வேலைநிறுத்ததை முடிவுக்கு கொண்டு வரவும், மாணவ, மாணவியர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.7500 நிர்ணயம் செய்யப்பட்டது

இந்த நிலையில் தற்காலிக ஆசிரியருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தொகுப்பு ஊதியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ 7500 ஆக இருந்த தற்காலிக ஆசிரியர் ஊதியம் ரூ 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *