shadow

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு வரவேற்பு குறைவதாக தகவல்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச 4ஜி சேவை மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதன் சேவையில் இணையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய தொடங்கியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியாவில் 4ஜி சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், இலவச ரோமிங், வாய்ஸ் காலிங், டேட்டா சேவைகளையும் அறிமுகம் செய்தது. இந்த சேவையை, அவ்வப்போது நீட்டிப்பு செய்துவரும் ஜியோ, 2017 மார்ச் 31ம் தேதியுடன் இந்த இலவசங்கள் முடிவுக்கு வருவதாகக் கூறியுள்ளது.

இதுவரை 10 கோடி ஜியோ சேவையில் இணைந்துள்ளனர். இவர்களை நிரந்தரமாக தக்க வைக்கும் நோக்கில், தனது வாழ்நாள் வாடிக்கையாளர் சேவையில் இணையும்படி பலரையும் ஜியோ நிறுவனம் அழைப்பு விடுத்துவருகிறது. எனினும், இந்த பிரைம் மெம்பர்ஷிப் சேவைக்குப் போதிய வரவேற்பு இல்லை என, தெரியவந்துள்ளது.

இலவசங்களால் ஈர்க்கப்பட்ட வாடிக்கையாளர்கள், மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், ஜியோ சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளதாகவும், கூறப்படுகிறது.

இதனால், பிரைம் மெம்பர்ஷிப்பில், ஜியோ சிம் வைத்திருப்போரில் 13% பேர் மட்டுமே இதுவரை இணைந்துள்ளதாக, தெரிகிறது. மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க, புதிய சலுகைகளை ஜியோ அறிமுகம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply