ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன்: டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டு மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கியதாகவும், மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும், மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என ராபர்ட் வதேரா தரப்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *