ராணுவ வீரர் கின்னஸ் சாதனை

guinness world record

மதுரையில் ராணுவ வீரர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த உடற்பயிற்சியை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் ஒரு மணி நேரத்தில் 2,289 சிட் அப்ஸ் செய்து, கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

அடுத்து மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த ராணுவ வீரரான ராமு (35) என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 2,507 சிட் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இவருடைய சாதனையை இவரே முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஒரு மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தினார். திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.