”ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் ரகுல் ப்ரித்திசிங்

விஷ்ணுவிஷால் , அமலாபால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் செய்யும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது விஷ்ணு, அமலாபால் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு முடிவுக்கு வந்துள்ளது.

இதன்படி விஷ்ணு கேரக்டரில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸும், அமலாபால் கேரக்டரில் ரகுல் ப்ரித்திசிங்கும் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் இந்த படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர் என்பதும் ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘ஜெய ஜானகி நாயகா’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் தமிழில் வில்லனாக நடித்த அதே சரவணன் என்பவர் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் தொடங்கவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *