ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாவார்களா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்பட பலர் போராடி வரும் நிலையில் ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் 7 பேரையும் விடுவிக்க ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் கொலை குற்றவாளிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

அதேபோல் தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி 7 பேரின் விடுதலைக்கு ஆளுநரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் 7 பேர் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *