shadow

ராஜீவ் காந்திக்கு இல்லாத தைரியம் எங்களுக்கு இருந்தது. அமித்ஷா ஆவேசம்

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் குறித்து இன்று பாராளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றில் அமித்ஷா ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் விவகாரம் குறித்து இன்றைய விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி-யும் அக்கட்சியின் தேசியத் தலைவருமான அமித் ஷா, “அசாம் மக்களின் குடியுரிமை குறித்த ஒப்பந்தத்தில் கடந்த 1985-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கையெழுத்திட்டார். ஆனால், அதை நிறைவேற்ற அவருக்கு தைரியமில்லை. தற்போது நாங்கள் அதைச் செய்துள்ளோம்” என்று கூறினார்.

அமித்ஷாவின் பேச்சுக்குப் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இருந்த காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் அந்த இடமே முற்றிலும் பரபரப்பாகக் காணப்பட்டது. காங்கிரஸாரை அமைதிப்படுத்த மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. காங்கிரஸாரின் அமளியால் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply