ராஜராஜசோழன் பெண்களை வேசியாக்கினாரா? கருணாஸ் ஆவேசம்

இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ‘தலித் பெண்களை ராஜராஜசோழன் வேசியாக்கியதாக ஆவேசமாக பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், ‘ராஜராஜசோழன் பெண்களை வேசியாக்கினார் என்பது கட்டுக்கதை. இந்த கதைகளெல்லாம் உங்கள் தேவைகளுக்கு ஓர் மாபெறும் இன வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்!

‘எங்கள் நிலங்களை பறித்தார்! பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என கூறி உங்கள் தேவைகளுக்கு ஓர் மாபெறும் இன வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்!

உங்களை போல் முன்னோரின் வரலாற்றை கற்காமல் கதைவிடாதீர்கள். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம்! தமிழர் மரபின் உச்சம்! நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள்! அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர்! தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! இது அறிவுரை கலந்த எச்சரிக்கை

இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *