ராகேஷ் சர்மா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஷாருக்கான்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜீரோ’ திரைப்படம் வரும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரவுள்ளது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார்.

இந்த் நிலையில் இந்தியாவின் முதல் வான்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விண்வெளியில் பறந்த முதல் இந்தியரானா ராகேஷ் சர்மாவின் வாழ்க்கையில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தை மகேஷ் என்பவர் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பூமிபடேகன்ர் என்பவர் நடிக்கவிருப்பதாகவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *