ராகுல் காந்தியின் கோட்டைக்குள் நுழையும் பிரதமர் மோடி!

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கோட்டையான அமேதியில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். மோடி பிரதமர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக அமேதி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கோர்பா முன்ஷிகஞ்ச்சில் இன்று நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ஆயுத தளவாட தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, கெளரிகஞ்ச் அருகே கோஹார் பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமராக பதவியேற்ற மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான அமேதிக்கு முதன்முறையாக இன்று செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *