shadow

ராகுல்காந்தியை சந்தித்த கே.எஸ்.அழகிரி: முக்கிய ஆலோசனை

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் நியமனம் செய்தார்.

இந்த நிலையில் #காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை கே.எஸ்.அழகிரி சற்றுமுன் சந்தித்தார் . இந்த சந்திப்பு ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது முகுல் வாஸ்னிக் உடனிருந்தார்

இந்த சந்திப்பின்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெல்வது குறித்து ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.

 

Leave a Reply