ரஹ்மான் இசையில் விஜய் பாடும் பாடல் எப்படி இருக்கும்?

பிகில் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. ஆனால் பலர் அறியாத செய்தி என்னவெனில் ‘வெறித்தனம்’ என்ற தொடங்கும் இந்த பாடல் உச்சஸ்தாயில் இருக்குமாம். கிட்டத்தட்ட பாடல் வரிகள் தொடர்ந்து வரும் என்பதால் ஒரு நீளமான பாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இதுவரை எளிமையான பாடல்களை மட்டுமே விஜய் பாடியுள்ள நிலையில் இந்த பாடலை பாடுவது விஜய்க்கு சவாலான விஷயம் என்றாலும் பயிற்சி கொடுப்பது ஏ.ஆர்.ரஹ்மான் என்பதால் இந்த பாடலை விஜய் பாடுவது பெரிய விஷயமாக இருக்காது என்றே கூறப்படுகிறது.

விஜய்க்கு இந்த பாடலை பாடிய அனுபவம் மறக்க முடியாததாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *