shadow

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு

ரஷிய நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காம்சாத்கா விரிகுடா பகுதியில் 76.2 கி.மீ. ஆழத்தில் அந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கின. வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீதிகளில் வந்து தஞ்சம் அடைந்தனர்.

காம்சாத்கா தீபகற்பத்தில் பல இடங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

Leave a Reply