shadow

ரவீந்திர சங்கீதம் ஒலித்த மேற்கு வங்கத்தில் வெடிச்சத்தம்: அமித்ஷா அதிரடி பேச்சு

இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பாலும் பாஜக நல்ல செல்வாக்கோடு இருந்தாலும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் தமிழகத்தை போலவே பாஜகவால் கால்பதிக்க முடியவில்லை

இந்த நிலையில் மேற்குவங்கத்தில் பாஜகவை பரப்ப இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பிரமாண்டமான பேரணி ஒன்றை நடத்தினார். இந்த பேரணிக்கு மாநில அரசு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவில்லை என்று பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு வங்கதின் மால்டாவில் நடைபெற்றுவரும் பிரமாண்டமான பாஜக பேரணியில் பேரணியில் பேசிய அமித்ஷா, ‘மேற்கு வங்கம் முழுவதும் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் தயாரிக்கும் ஆலைகள் பெருகிவிட்டதாகவும் ரவீந்திரநாத் தாகூரின் சங்கீதம் ஒலித்துக்கொண்ருந்த மேற்கு வங்கத்தில் இப்போது வெடிச்சத்தம் தான் அதிகாம் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *