ரயில் விபத்து எதிரொலி: 8 ரயில்கள் ரத்து, மாற்றுப்பாதையில் சில ரயில்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் அருகில் ஜோதா பதக் என்ற பகுதியில் தசரா கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த போது ராவணன் உருவபொம்மைக்கு தீயிடும் நிகழ்வு நடைபெற்றது. அதிக உயரமுடைய உருவபொம்மை எரிவதைக் காண ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ரயில் பாதை ஒன்றின் தண்டவாளத்தில் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாகச் சென்ற ரயில் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் வேடிக்கை பார்த்தவர்களை மோதி விட்டுச் சென்றது. இந்த ரயில் விபத்தில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சார் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் நிகழ்ந்த ரயில் விபத்தை அடுத்து அமிர்தசரஸ்-மனவாலா இடையே 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

(thanks to tweet)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *