ரத்த வாந்தி எடுத்த மகனை அடித்து வெளுத்த தாய்: அதிர்ச்சி வீடியோ!

ரத்த வாந்தி எடுத்த மகனே அவருடைய தாயார் அடித்து உதைத்த வீடியோ பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டிக்டாக் வீடியோவிற்கு பலர் அடிமையாகி விட்டனர் என்பதும் டிக்டாக்கில் வித்தியாசமான வீடியோக்களை போட்டால் லைக்ஸ் கிடைக்கும் என்பதற்காக ஒரு சிலர் எந்த லெவலுக்கும் செல்ல தயாராக இருந்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் டிக்டாக் வீடியோவில் அதிக லைக்ஸ்களை விரும்பிய ஒரு இளைஞன் ரத்த வாந்தி எடுப்பது போல் நாடகமாடி உள்ளார். இதனை உண்மை என நம்பிய அவருடைய தாய் அதிர்ச்சி அடைந்து பதறியபோது, அந்த இளைஞர் சிரித்துக் கொண்டே எழுந்திருக்கின்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தத் தாய் தனது மகனை அடித்து உதைக்கும் காட்சிகள் டிக்டாக் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஒரு சில நிமிடங்கள் ஆன பின்னரும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அந்த இளைஞரின் தாய் மூச்சுவிட சிரமப்பட்டு இருப்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது. ஒருசில லைக்ஸ்களுக்காக இந்த அளவுக்கு இறங்கி ஒரு வீடியோவை பதிவு செய்ய வேண்டுமா என நெட்டிசன்கள் அந்த இளைஞனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *