ரஜினி , முருகதாசுடன் இரண்டாவது முறையாக இணைகிறார் அனிருத் !

கோலிவுட் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது . கடந்த பொங்கல் அன்று வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘ பேட்ட ‘ படத்தில் உள்ள ‘ மரணம் மாசு மரணம் ‘ பாடல் ரசிகர்களிடையே பெரும் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் , ஏ.ஆர் . முருகதாஸ் கூட்டணியில் வெளியாக உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்திலும் அனிருத் இசையமைக்க உள்ளதாக பேட்டி ஒன்றில் அனிருத் தெரிவித்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினியின்’ பேட்ட ‘ மற்றும் ஏ.ஆர் . முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ கத்தி ‘ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் சூப்பர்ஸ்டார் , ஏ.ஆர் . முருகதாஸ் படங்களில் அனிருத் இசையமைக்க உள்ளார்.

ஏற்கனவே தும்பா , ஜெர்ஸி , இந்தியன் 2 போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *