ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழக அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது ரஜினி மக்கள் மன்றத்திற்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட இளைஞரணி, மகளிரணி அமைப்புகள், மாவட்ட செயலாளர்கள் ,பொருளாளர்கள் கண்காணிப்பின் கீழ் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், தினசரி பணி தொடர்பான தகவல்களை அறிக்கையாக மாவட்ட பொருளாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *