ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து அதற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் முயற்சியில் உள்ளார்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் சற்றுமுன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் என்று சிலர் வதந்தியை பரப்பி வருவதாக மன்றத்திற்கு தகவல் வந்துள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்கள் என்றோ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் என்றோ இதுநாள் வரை யாரும் நியமிக்கப்படவில்லை என்பதி தெரிவித்து கொள்கிறோம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *