ரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா

சூப்பர் ஸ்டார் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் ‘சிங்காரம்’ என்ற வில்லன் கேரக்டரில் நடித்திருந்த நவாசுதீன் சித்திக் ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

நவாசுதீன் சித்திக் சகோதரர் ஷாமாஸ் நவாப் சித்திக் இயக்கவிருக்கும் இந்த படம் இந்தியில் தயாராகவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

‘பேட்ட’ படத்தில் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடித்திருந்தாலும் அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகர் என்பதாலும், தன்னுடைய கேரக்டருக்கு இந்த படத்தின் கதையில் அதிக முக்கியத்துவம் இருப்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார்

Leave a Reply