shadow

ரஜினி படத்துடன் ரிலீஸ் ஆகும் சிம்பு பட டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீசரை வெளியிட இரு படங்களின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனை உறுதி செய்வதை போல் சற்றுமுன் லைகாவின் டுவிட்டர் பக்கத்தில் நவம்பர் 29ஆம் தேதி
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பு ஒரு புரமோ வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சுந்தர் சி இயக்கி வரும் இந்த படத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். சிம்பு படத்திற்கு அவர் முதல்முறையாக இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply