shadow

ரஜினி சொல்லும் அற்புதம் நிச்சயம் நடக்கும்: சீமானின் ஆச்சரியமான பதில்


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் கட்சியை நடத்தி வரும் சீமான், இன்னும் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறும் அளவுக்கு வளராத நிலையில் ரஜினி எதிர்ப்பு அரசியலை கடந்த சில மாதங்களாக தீவிரப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று கோல்டன் ஐகான் விருதினை பெற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த பேட்டி ஒன்றுக்கு சீமான் காட்டமாக பதில் கூறியுள்ளார்.

இன்றைய ரஜினி பேட்டியில், ‘2021ஆம் ஆண்டு தமிழக மக்கள், தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த பேட்டிக்கு ஆம் அதிசயம் நிகழும் என்பதை ஒப்புக்கொண்ட சீமான், ‘ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமான தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும் என்று கூறினார். மேலும் தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் ரஜினிகாந்த் பேசி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *