ரஜினி, கமலை விட இவருக்குத்தான் அந்த விருது பொருத்தம்: பிரபல இயக்குனர்

மத்திய அரசு நேற்று கோல்டன் ஐகான் என்ற விருதை ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவித்திருந்த நிலையில் பாஜகவின் ஆதரவாளர் ரஜினிக்கு இந்த விருதை அளித்ததை விட 60 ஆண்டுகளாக சினிமாவில் சேவை செய்து வரும் கமலுக்குத்தான் அறிவித்திருக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் விஜய்ஸ்ரீ என்பவர் இதுகுறித்து ஒரு கடிதம் எழுதி அதனை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:

1975ல்‌ தமிழ்‌ சினிமாவில்‌ அறிமுகமான துப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ தொடர்ந்து சினிமா துறையில்‌ நடித்து வருகிறார்‌. நேற்று அவருக்கு “வாழ்நாள்‌ சாதனையாளர்‌” விருது மத்திய அரசு அறிவித்ததில்‌
மிகவும்‌ மகிழ்ச்சி. இந்த தருணத்தில்‌ பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்களுக்கும்‌, மத்திய அமைச்சர்‌ பிரகாஷ்‌ ஜவடேகருக்கும்‌ எனது நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

உதிரிப்பூக்கள்‌ படத்தின்‌ மூலம்‌ அறிமுகமான திரு சாருஹாசன்‌ அவர்கள்‌ முதுமையில்‌ தனது 90 வயதிலும்‌ தொடர்ந்து நடித்து வருகிறார்‌. இந்திய நடிகர்களிலேயே வயதான நடிகர்‌ என்ற சாதனையையும்‌
வைத்திருப்பவர்‌.1987ஆம்‌ ஆண்டில்‌ கிரிஷ்‌ கசரவல்லி இயக்கிய ” தபெரனா கதெ ” என்னும்‌ கன்னடத்‌ திரைப்படத்தில்‌ சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்‌. மேலும்‌ சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருதும்‌ பெற்றுள்ளார்‌.

உலக அளவில்‌ பார்க்கும்‌ போதும்‌, 90 வயதில்‌ தற்சமயம்‌ இவர்‌ தான்‌ நடித்து வருகிறார்‌. இந்திய நடிகரின்‌ இந்த சாதனையை உலகம்‌ அறிய செய்ய வேண்டும்‌. சாருஹாசன்‌ அவர்களுக்கு “வாழ்நாள்‌ சாதனையாளர்‌
விருது: வழங்கிட வேண்டும்‌ என்பதே என்னைப்‌ போன்ற சினிமா ஆர்வலர்களின்‌ அன்பான வேண்டுகோள்’ இவ்வாறு விஜய்ஸ்ரீ கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இயக்குனர் விஜய்ஸ்ரீ, சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *