shadow

ரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா: ஒரு ஆச்சரிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’தலைவர் 168’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் சென்னையில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஆகிய இருவரும் நடித்து வரும் நிலையில் நயன்தாரா திடீரென இந்த படத்தில் இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

நயன்தாரா ரஜினிக்கு மூன்றாவது ஜோடியா? அல்லது சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாரா? அல்லது அவருக்கு என்ன கேரக்டர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்பதால் ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *