shadow

ரஜினியின் வாக்குகளை சிதறடிப்பதுதான் விஜய் நோக்கமா?

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் புதிய அரசியல் கட்சி தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் களமிறங்கியுள்ள நிலையில் ரஜினிக்கு போட்டியாக விஜய்யை களமிறக்க ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர்

ரஜினிக்கு போட்டியாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தாக்குபிடிக்க முடியாது என்பதை முடிவு செய்து கொண்ட பின்னர் தற்போது புதிதாக விஜய் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளையும் பிடிக்காதவர்கள் தான் ரஜினிக்கு வாக்களிக்கவுள்ளனர் இந்த நிலையில் ரஜினிக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை சிதறடிக்க விஜய்யை களமிறக்கனால் அதிமுக அல்லது திமுக ஆட்சிக்கு வந்து விடலாம் என்பதே இந்த இரண்டு கட்சிகளின் நோக்கமாக உள்ளது

மேலும் ரஜினிக்கு பாஜக முத்திரையை குத்தி, பாஜகவுக்கு எதிரானவர் விஜய் என்ற முத்திரையை குத்தினால் ரஜினியை எளிதில் தோற்கடித்து விடலாம் என்ற திட்டமும் அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு கூறப்படுகிறது மொத்தத்தில் ரஜினியை தோற்கடிக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மறைமுகமாக இணைந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *