ரஜினியின் ‘பொதுவான மொழி’க்கு பதிலடி கொடுத்த கமல்!

நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு மொழி வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அது அமைய சாத்தியமில்லை என சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்

இது குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்த போது ’ஆங்கிலம் என்ற பொதுவான மொழி நாடு முழுவதும் ஏற்கனவே இருப்பதாகவும் பொதுவான மொழி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினியை தன்னுடைய 40 ஆண்டுகால நெருங்கிய நண்பர் என்று கமல் கூறிக்கொண்டாலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவரை விமர்சனம் செய்ய தயங்காத கமல்ஹாசன் இன்றும் அதே போல் பொதுவான மொழி குறித்த கருத்தில் ரஜினி குறித்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆங்கிலம் என்பது உலகம் முழுவதும் பொதுவான மொழி என்றும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பொதுமொழி வேண்டும் என்றும் அதுவொரு இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் ரஜினி பேசியதாகவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *