ரஜினிக்கு ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் பிறந்த நாள் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்கள் மூலமும் போனிலும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ‘நீண்ட ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வாழ்த்துவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரஜினிக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் ரஜினிக்கு போனிலும் டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், காஜல் அகர்வால், அனுஷ்கா, இயக்குனர் ரஞ்சித், உள்பட பல திரையுலக பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.