ரஜினிகாந்த் வரி விவகாரம் குறித்து நேற்று பரபரப்பான செய்திகள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து டுவிட்டர் பயனாளி ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அது இதுதான்:

சிஸ்டம் சரியில்லை என்பதற்கு இன்றைய சம்பவங்களே உதாரணம்.சட்டப்படி 30 நாளுக்கு மேலாக காலியாக இருக்கும் மண்டபத்துக்கு வரி நிவாரணம் கேட்க சம்மந்தபட்டவருக்கு உரிமை உண்டு. அதனால் ரஜினிகாந்த் சட்டப்படி வரி நிவாரணம் கேட்டு மாநகராட்சிக்கு Sep 23ல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார்

ஆனால் 22 நாட்களாகியும் மாநகராட்சியிடமிருந்து பதிலில்லை. இதற்கு மேல் தீர்வு வேண்டுமென்றால் ஒன்று குறுக்கு வழியில் செய்யனும். இல்லை கோர்ட்டை அணுகனும்.
ரஜினிகாந்த் கோர்ட்டை அணுகினார். ஆனால் கோர்ட், ஏன் எங்க நேரத்தை வீண்டிக்கிறீர்கள், அவங்ககிட்டையே போய் கேளுங்கனு சொல்லுது

அதாவது, ஏற்கனவே நோட்டிஸ் விட்டும் பதில் வராதவங்ககிட்ட திரும்பவும் நினைவூட்டனுமாம். என்னடா சிஸ்டமா இது? இது ரஜினிகாந்த் க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள எல்லா வணிக கட்டிடங்களுக்குமான பிரச்சனை.வாராத வருமானத்துக்கு வரி கட்டனும். இதான் சிஸ்டமா?? இதில் அரசு என்ன செஞ்சுருக்கனும்?

அரசு அதாகவே வருமானமில்லாத கட்டிடங்களுக்கு வரி தள்ளுபடி செய்திருக்கனும்.
இல்லை, நோட்டிஸ் கிடைத்தபின் முறையாக பதில் போட்ருக்கனும். ரெண்டும் இல்லாமல் கிடப்பில் போட்டா என்ன அர்த்தம்? ஒரு சாதாரண குடிமகனுக்கு, எங்க நியாயம் கிடைக்கும்? கோர்ட். அதான் ரஜினிகாந்த் கோர்டுக்கு போனார்

ஆனா தங்கள் நேரத்தை வீணடிக்காதேனு சொல்ற கோர்ட், ஒரு இந்திய குடிமகனின் 22 நாட்கள் அரசால் வீணடிக்கப்பட்டிருப்பதற்கு ஒன்றும் சொல்லலை. இதைத்தானே சூர்யா சொன்னார். கோர்டுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயமானு? பதில் வராத இடத்துக்கே திரும்பவும் போன்னு சொல்றதுதான் சிஸ்டமா?

ரஜினிகாந்த் நினைத்திருந்தால் இதற்கு பல வழிகளில் தீர்வு கண்டிருக்கமுடியும். ஆனா செய்யலை.எல்லாமே சட்டப்படி போகவேண்டும் என நினைக்கிறார்.அதான் நோட்டிஸ், கோர்ட் என்று முறைப்படி சென்றார். அப்படி போனவருக்குத்தான் இந்த கதி. ரஜினிக்கே இப்படினா, சாதாரண மனிதனுக்கு? இந்த சிஸ்டம் மாறனும்

சட்டப்படி ஒரு வரிவிலக்கு பெற 22 நாளாகியும் கோர்ட் மறுபடி முதல்ல இருந்து என்று சொல்கிறது. ஒரு தீர்வுக்கு அரசாங்கத்தை அணுகும் சாதாரண மனிதனின் நிலைமையும், அரசு அதிகாரிகளின் மெத்தனமும், கோர்ட்டின் எச்சரிக்கையும் அதிர்சியடையவைக்கிறது.எந்த விசயத்துக்கும் இங்கு உடனடி தீர்வு இல்லை.

பொதுமக்களின் நேரத்தை granted ஆக எடுத்துக்கொண்டு, அரசு இயந்திரத்தின் அலட்சியத்தையும் , கோர்ட்டின் நேரத்தையும் மட்டுமே பார்க்கும் இந்த இத்துப்போன சிஸ்டம் நமக்கு தேவையா?இந்த சிஸ்டம் மாறனும்.பொதுமக்களின் நேரத்தை,பணத்தை மதிக்கும் சிஸ்டம் வரனும். அது ரஜினிகாந்த் மட்டுமே செய்யமுடியும்

இன்றைய நிகழ்வுகளுக்கு ஜால்ரா போடுபவனை பாருங்க.ஒருத்தன் கூட ஏன் 22 நாளாக அரசு பதில் அனுப்பலைனு கேட்கலை. மாறா பாதிக்கப்பட்டவனை இகழ்கிறார்கள்.ஒருவனுக்கு நியாயம் கிடைக்க தாமதமாவதை கொண்டாடும் அளவில்தான் இன்றைய சிஸ்டமை 2 திராவிட கட்சிகளும் வைத்திருக்கின்றன. எதற்கெடுத்தாலும் தாமதம்

ரஜினிகாந்த்க்கு நடப்பதுதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்று நடக்கிறது. இந்த Systemல் மனித நேரம் என்பது மதிக்கப்படுவதேயில்லை.அரசு சம்பந்தப்பட்ட வேலை என்றாலே தாமதம், தாமதம்தான். ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண மாதக் கணக்கில், வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டும்.இந்த சிஸ்டம் மாறனும்

முதலில் சில யோக்கியன்களின் பதிவை பாருங்கள். இத்தனை சம்பாதிக்கிறார் 6.5 லட்சம் கட்ட முடியாதானு கேட்கறானுக.. எதுக்குடா கட்டனும் ? கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்துபவர் ரஜினிகாந்த். 6.5 லட்சம் ஒன்றுமில்லைதான். ஆனால் சட்டப்படி என்றால் எத்தனை கோடி வேண்டுமென்றாலும் கட்டுவார்

அப்படி சட்டப்படி இல்லையென்றால் அதற்கு தீர்வு காணுவார். உழைத்து சம்பாதித்தவனுக்கு, தெருவில் இருந்து கோடிஸ்வரன் ஆனவனுக்குத்தான்டா ஒவ்வொரு ரூபாயின் அருமையும் தெரியும். தெரிஞ்சதுனாலதான் அவர் இன்னும் இந்த நிலையில் இருக்கிறார். மக்கள் பணத்தை திருடுபவனுக்கு கோடி கூட ஜுஜுபிதான்.

ஆனானப்பட்ட அமிதாப்பே Money Management சரியாக செய்யாததால் ஒரு கட்டத்தில் தெருவுக்கு வந்தார். ரஜினிகாந்த் பணத்தை மதிப்பவர். பணத்தை மதிப்பவனுக்குத்தான் பொதுமக்கள் பணத்தின் அருமை தெரியும்.திருடனுக்கு தெரியாது.இன்று அவர் சேர்க்கும் ஒவ்வொரு காசும் நாளை மக்களுக்கு போகக்கூடியது.

நேர்மையாக வரி செலுத்திவரும் ஒருவன் எவ்வாறு இன்றைய சிஸ்டமால் அழைக்கழிக்கப்படுகிறான் என்பதை இன்று காட்டியிருக்கிறார் ரஜினிகாந்த் இந்த சிஸ்டத்தை மாற்றி, எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடியாக தீர்வு கிடைக்குமாறு செய்வதுதான் அவரின் ஒரே நோக்கம். அதற்கு துணை நிற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *