ரஜினிகாந்த் மகளாக நயன்தாரா, த்ரிஷா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட ஒருசில நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் மகளாக நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா ஆகிய இருவரிடமும் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் இருவரும் ஜோடி, மகள் எந்த கேரக்டருக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் வந்துவிடும் என்றும் வரும் ஜூலை மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் டேராடூனில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.,

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *