shadow
ரசிகர்களுடன் அவசர ஆலோசனை: அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறாரா கமல்
முன்னாள் முதல்வர் மறைவிற்கு பின்னர் கமல், ரஜினி இருவருமே அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள நிலையில் ரஜினியை கமல், அரசியல் விஷயத்தில் முந்திவிடுவார் என்றே கருதப்படுகிறது.
அரசியலுக்கு வருவதை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட கமல், விரைவில் தனது தனிக்கட்சி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில்  ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தீவிர அரசியலில் குதிப்பது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை செய்து வருவதாகவும், கூட்டம் முடிந்த பின்னர் அரசியல் அறிவிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமல் ஏற்கனவே ‘சபாஷ் நாயுடு’, ‘விஸ்வரூபம் 2’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களை முடிக்க வேண்டியதுள்ளதால் இந்த படங்களை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவரா? அல்லது இரண்டு குதிரையிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply