shadow

யூடியூப் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

வீடியோ தளமான யூடியூப் பிரபலமான வீடியோக்களில் ஏற்படும் வன்முறை தீவிரவாதம், குழந்தைகளைத் தவறாக நடத்தும் வீடியோ போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 10,000 நபர்களைப் பணியில் சோ்க்க உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் வீடியோ பிரிவு சிறப்பு ஊழியரான சூசன் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தவறான நடிகர்கள் யூடியூபை தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.

எனவே 2018-ம் ஆண்டில் வீடியோவில் வரும் தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்குவிளைவிப்பது போன்ற பிரச்சினைகளை களைவதற்கு 10 ஆயிரம் நபர்களைப் பணியில் அமா்த்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

யூடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக், கூகுள், டுவிட்டா் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் பயங்கரவாத பொருள் மற்றும் பிரசாரம் போன்ற தேவையற்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதமர் தெரேஷா மே, சமூக வலைத்தளங்கில் உள்ள தீவிரவாத உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளாா். டெக் நிறுவனங்களும் இணையதளங்களில் தீவிரவாதம் போன்ற உள்ளடக்கங்கள் வராத அளவிற்கு மேலும் வேகமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரேஷா மே கூறினார்.

சில வீடியோக்கள் பெரியவர்களுக்கானதாக இருக்கும், அதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது, இதற்காக நாங்கள் தீவிரமாக வேலை செய்து வருகிறோம் என்று யூடியூப் நிர்வாகமும் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்காகவே யூடியூப் கிட்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் கிட்ஸ் மூலமாக 37 நாடுகளில் மட்டும் 800 மில்லியன் வீடியோ பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply