மெல்போர்ன் போல் சென்னை மாறும்: ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய அமைச்சர் பேட்டி

தமிழக அமைச்சர் வேலுமணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமைச்சர் வேலுமணி சென்னை திரும்பியுள்ளார்.

தனது ஆஸ்திரேலிய பயணம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, ‘ மெல்போர்ன் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றை நேரில் பார்த்து ஆராய்ந்ததோடு இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டேன்

சென்னையிலும் மெல்போர்ன் போலவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டங்களை நிறைவேற்ற உலக வங்கி மற்றும் ஜெர்மன் வங்கிகள் கடன் அளிக்கத் தயாராக உள்ளது. இதுகுறித்த பணிகள் விரைவில் தொடங்கும்’ என்று அவர் மேலும் கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *