shadow

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.

தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிந்த பின்னர் சற்றுமுன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை கேட்டதும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். மேலும் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கரகோஷம் செய்தனர்

Leave a Reply