‘மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு: ரயில் சேவையில் காலதாமதம்’

சென்னையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆயிரம் விளக்கு-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை ஒரு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இன்னும் சிறிது நேரத்தில் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டுவிடும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இதே வழித்தடத்தில் மின்கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை சில மணி நேரங்கள் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *