மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம்: மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் 250 தனியார் பள்ளிகள் விரைந்து அங்கீகாரத்தை பெறுமாறு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்பட்ட 2,000 மெட்ரிக் பள்ளிகளில், 1,750 பள்ளிகள் அண்மையில் அங்கீகாரம் பெற்றன. இவற்றில் 250 தனியார் பள்ளிகள் இன்னும் அங்கீகாரம் பெறாமல் இருந்து வரும் நிலையில், அப்பள்ளிகள் விரைந்து அங்கீகாரம் பெற வேண்டுமென மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 2020ம் ஆண்டு மே 31ம் தேதியுடன் 1,750 மெட்ரிக் பள்ளிகள் பெற்ற தற்காலிக அங்கீகாரம் முடிவதால், அப்பள்ளிகளும் அங்கீகார நீட்டிப்பு கோரி அடுத்தாண்டு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *