shadow

மூடர் கூடம்’ நவீனின் அடுத்த படத்தில் இரண்டு விஜய்

மூடர் கூடம்’ பட இயக்குனர் நவீன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் என இரண்டு விஜய்கள் நடிக்கவுள்ளனர்.

விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு திரையுலக பிரமுகர் ஒருவர் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply