shadow

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: கலந்து கொண்டவர்கள் யார் யார்?

மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு நேற்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது.

இதனையடுத்து சற்றுமுன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனைத்து கட்சி கூட்டம் என்று கூறப்பட்டாலும் அதிமுக, அமமுக, பாமக, பாஜக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு அழைப்பு இல்லை என்பதால் இந்த கூட்டம் திமுக கூட்டணி கூட்டம் என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply