shadow

மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் பிரதமர்: துரைமுருகன்

சமீபத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் அடுத்த பிரதமர் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் தென்காசியில் ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், கடந்த 55 ஆண்டுகளில் கருணாநிதியை விட்டு அவரது நிழல் கூட பிரிந்திருக்கலாம், ஆனால் தான் அவரை ஒருபோதும் பிரிந்தில்லை என்று உருக்கத்துடன் கூறினார்.

மேலும் தனது குடும்பத்திற்காக செலவு செய்த நாட்களை விட கருணாநிதியின் அருகில் இருந்த நாட்கள்தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதாக சாடிய அவர், டெல்லியில் அடுத்து அமையவிருக்கும் மத்திய ஆட்சியை நிர்மாணிக்க கூடிய சக்தி ஸ்டாலினிடம் உள்ளது என்றும் கூறினார்.

Leave a Reply