மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

இன்று காலை கரையை கடந்த கஜா புயலை தமிழக அரசு எதிர்கொண்ட விதத்தை சமூக வலைத்தளங்கலில் பலர் பாராட்டியுள்ளனர். குறிப்பாக அமைச்சர்களே நேரடியாக களத்தில் இறங்கி இரவு முழுவதும் புயல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயல்பட்ட விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்த நிலையில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் டுவிட்டர் மூலம் பாராட்டியிருந்தனா. இந்த பாராட்டுதல் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:

கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது வரவேற்கத்தக்கது குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும் சிறந்த பணியை மேற்கொள்ளும்போது அதனை வாழ்த்துவதும் அரசிற்கு உற்சாகத்தை தரும் என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *