Chennai Today News

மு.க.ஸ்டாலினுக்கு தேவை பாரதரத்னா தான், பாரத் பந்த் இல்லை: தம்பிதுரை

மு.க.ஸ்டாலினுக்கு தேவை பாரதரத்னா தான், பாரத் பந்த் இல்லை: தம்பிதுரை

கடந்த சில நாட்களாகவே பாஜகவை அதிமுகவை விமர்சனம் செய்து வருவதும், காங்கிரஸை திமுக விமர்சனம் செய்து வருவதுமாக செய்திகள் வெளிவந்துள்ளது. பாஜக-திமுக மற்றும் அதிமுக-காங்கிரஸ் என கூட்டணி மாறுமோ என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அதிமுக எம்பி தம்பிதுரை கூறியதாவது: மு.க.ஸ்டாலினுக்கு தற்போது தேவை பாரத ரத்னாதான், பாரத் பந்த் தேவை இல்லை.

மத்திய அரசை எதிர்கின்ற துணிவு திமுகவுக்கு இல்லை என்பதை பாரத் பந்த காட்டியது மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை, பாஜக உடன் உறவை புதுப்பிக்கவே ஸ்டாலின் பயணம் என்று கூறியுள்ளார்.