shadow

மு.க.அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கம்

திமுக நிர்வாகி ரவி என்பவர் திமுக கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமைதிப்பேரணியை நாளை நடத்த திட்டமிட்டுள்ள கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி சென்னை வந்த போது அவரை விமான நிலையத்தில் திமுக நிர்வாகி ரவி என்பவர் வரவேற்றார்.

கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை கட்சியின் நிர்வாகி வரவேற்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் ரவி தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

Leave a Reply