முருங்கைக்கீரை இட்லி செய்வது எப்படி தெரியுமா?

முருங்கைக் கீரையை வைத்து அடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று முருங்கைக் கீரை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு – 1 கப்,
ஆய்ந்த முருங்கைக் கீரை – ஒரு கப்,
[பாட்டி மசாலா] மிளகு தூள் – அரை டீஸ்பூன்
[பாட்டி மசாலா] சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை :

முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

இட்லி மாவுடன் கீரை, [பாட்டி மசாலா] மிளகு தூள், [பாட்டி மசாலா] சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான முருங்கை இலை இட்லி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *