‘முரட்டு சிங்கிளும்’, ‘முரட்டுக்குத்து நாயகியும்’: வைரலாகும் புகைப்படம்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் நாயகியும் பிக்பாஸ் இரண்டாம் சீசன் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் மற்றும் நடிகர், இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகிய இருவரும் உள்ள ஒரு புகைப்படத்தை பிரேம்ஜி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் பிரேம்ஜியின் டீசர்ட்டில் ‘முரட்டு சிங்கிள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

சமீபத்தில் பிரேம்ஜிக்கு திருமணம் என்ற செய்தி வெளியான நிலையில் அவர் தான் எப்போதுமே ‘முரட்டு சிங்கிள்’தான் என்று தனது டுவிட்டரில் அறிவித்திருந்த நிலையில் இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வித்தியாசமான கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரேம்ஜியும் யாஷிகாவும் சமீபத்தில் நடைபெற்ற ‘ஜாம்பி’ இசை வெளியீட்டு விழாவின்போது எடுக்கப்பட்ட இந்த படம் புகைபப்டம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *