மும்பையில் சிகிச்சை பெற்ற உலகின் மிக குண்டான பெண் மரணம்!

உடல்பருமனைக் குறைப்பதற்காக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உலகின் குண்டான பெண் எமான் அகமது என்பவர் இன்று அபுதாபியில் உயிரிழந்தார். அவருக்கு வயது 36

எகிப்து நாட்டில் கெய்ரோ நகரைச் சேர்ந்தவர் எமான் என்றா பெண்மணி 11 வயதில் இருந்தே உடல்பருமன் நோயால் அவதிக்குள்ளானார்.. சுமார் 25 ஆண்டுகளாக படுக்கையிலேயே நாட்களை கழித்து வந்த அவருக்கு சமீபத்தில் இந்தியாவில் மும்பை நகரில் உள்ள சாய்ஃபீ மருத்துவனை எமானுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது. சிகிச்சைக்குப் பின் கடந்த மார்ச் மாதம் எமானின் எடை 330 கிலோ குறைந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, அபுதாபி சென்று சிகிச்சையை தொடர்ந்த எமான் இன்று காலை திடீரென மரணம் அடைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் இறந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த புர்ஜீல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *